தளபதி விஜய் ,பூஜா ஹெக்டே ,செல்வராகவன் ,யோகி பாபு ,வி.டி.வி.கணேஷ் ,அபர்ணா தாஸ் ,ரெடின் கிங்ஸ்லி ,லில்லிபுட் ஃபாருக் .
################
எழுத்து, இயக்கம்:நெல்சன் திலீப் குமார் ,ஒளிப்பதிவாளர் : மனோஜ் பரம ஹம்சா,கலை :கிரண் ,எடிட்டிங் : ஆர்.நிர்மல் ,ஸ்டண்ட் :அன்பறிவ் ,நடனம்: ஜானி ,பி.ஆர் .ஓ :ரியாஸ்
&&&&&&&&&&&&&
மிகவும் எதிர்பார்க்கப் பட்ட படம் ‘பீஸ்ட் ‘ தளபதி விஜய் நடித்திருக்கிறார்.மிகுந்த பொருட் செலவு ,உடல் உழைப்பு என தனக்கு தேவையான சகலத்தையும் சன் பிக்சர்ஸ் வழியாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் பெற்று இருப்பதும் ,அவருக்கு கை வந்த டார்க் காமடியும் படத்தில்இருப்பது தெரிகிறது.
கதையில் , விஜய் இருக்கிறார். இவர் இல்லாமல் வேறு எவரும் அவரது கேரக்டரை செய்திருக்க முடியாது.அந்த அளவுக்கு படத்துக்கு பாதுகாவலனாக இருக்கிறார்.
விஜய் அளவுக்கு டான்ஸ் ஆட யாரும் இல்லை என்பது பிளஸ். ( ஏன் .தனுஷ் ,சிம்பு இவர்களெல்லாம் இல்லையா என்று பலர் கேட்கலாம்!!) ஆகவே நடனக்காட்சிகளில் துடிப்பு இருக்கிறது சூப்பர். நெல்சனை காப்பாற்றி இருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா .ஸ்டண்ட் அன்பறிவ் ,டான்ஸ் மாஸ்டர் ஜானி மூவரையும் குறிப்பிட்டாக வேண்டும்.
சரி சரி ,கதையை கொஞ்ச..ச..மாவது சொல்லுங்க என்கிறீர்களா ?
தமிழகத்தில் தன்னுடைய தீவிரவாதத்தை இறக்கி வைக்க இஸ்லாமிய தீவிர வாதிகள் திட்டமிட்டு ஆட்களை இறக்குகிறார்கள் . சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மால் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிறது. அந்த மாலுக்குள் மாட்டிக்கொண்டவர்களில் முன்னாள் ரா அதிகாரி விஜய் ,அவரை காதலிக்கும் பூஜா ஹெக்டேயும் இருக்கிறார்கள்.
ரா வில் இருந்த விஜய் யை பயன்படுத்தி மாலில் மாட்டிக்கொண்டவர்களை விடுவிக்கிற முயற்சியில் ராணுவத்தை சேர்ந்த செல்வராகவன் திட்டமிடுகிறார். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிற மத்திய உள்துறை மந்திரியின் பொய்யான நடவடிக்கைக்கு துணை போகாமல் நேர்மையாக செயல்படுகிறார் செல்வராகவன்.ஆறுதல் தரும் நடிப்பு. காமெடியாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்துகிற வசனமும் அவரது உடல்மொழியும் ரசனை ! செல்வராகவனுக்கு வாழ்த்துகள்.இவருக்கு புகை பிடிக்கிற பழக்கம் இல்லை போலும்.சிரமம் முகத்தில் தெரிகிறது.!
எப்படி தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மால் மீட்கப்படுகிறது ,திகாரில் இருந்து விடுதலையான பயங்கரவாதிகளின் தலைவனை எப்படி பாகிஸ்தான் சென்று விஜய் மீட்கிறார் என்பது மீதி கதை. இங்கு இயக்குநர் சற்று அவசரப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.
தொடக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் ,ரா அமைப்பு என்றெல்லாம் வித்தியாசம் காட்டிய இயக்குநர் அடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என்கிற ஆர்வத்தில் டார்க் காமெடிக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
விஜய்யின் ஸ்டண்ட் ,நடனம் ,நக்கலாய் உதிர்க்கும் வசனம் படத்தை காப்பாற்றுகிறது. நடன ஆசிரியர் ஜானி ,ஸ்டண்ட் அன்பறிவ் முதுகெலும்பாக இருக்கிறார்கள்.
காமடி தரப்பில் வி.டி.வி.கணேஷ் அளவுக்கு யோகிபாபுவினால் சிரிக்கவைக்கமுடியாமல் போவதற்கு அவரது கேரக்டரின் தன்மையே இடையூறாக முதலில் நிற்கிறது.
பூஜா ஹெக்டே துணை கரகம் மாதிரி! கோவில் திருவிழாக்களில் கரகம் ஆடுவதற்கு துணையாக தலையில் கிரகத்துடன் ஒருவர் வருவார் மதுரைப் பக்கம்! அதைப்போல நாயகனுக்கு ஒட்டுப்புல் மாதிரி வருகிறார்.