நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமாகிய, நடிகர் விக்ரம் பிரபு, “ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்” (First Artist) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார்.இதன் முதல் தயாரிப்பாக “நெருப்புடா” என்ற திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.இப்படத்தில், அவர் ஒரு தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இத்திரைப்படத்தை, “சந்திரா ஆர்ட்ஸ்” (Chandaraa Arts) மற்றும் “சினி இன்னோவேஷன்ஸ்” (Cine Innovations) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.