செவ்வாய்க்கிழமை …தமிழகத்தில் முருகனது ஆலயங்களில் வழிபாடுகள் சிறக்கும். அன்றுதான் அருகனுக்கு பிறந்த நாளாம் .
அந்த நன்னாளில்தான் வடபுலத்து நடிகை காஜல் அகர்வாலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. மும்பையில் அதிகாலை வரவு.
தாயும் சேயும் நலம். அவர்களது இனிய இல்லத்துக்கு புதிய வரவு.
இந்தியன் 2-விலிருந்து விலகி பத்து மாதங்களைக் கடந்து மடி மேல் பலன் கிடைத்து விட்டது.
ஆனால் இந்தியன் 2 ,கிணற்றின் கல்லாகவே கிடக்கிறது. 2020 -அக்டொபர் 30-ல் காஜல் மண மாலை சூட்டிக்கொண்டார். கவுதம் கிச்சுலுவின் மனமொத்த வாழ்க்கைக்கு கட்டில் பரிசாக தன்னைக்கொடுத்துவிட்டு தற்போது தொட்டில் பரிசினை கணவனுக்கு கொடுத்து இருக்கிறார் , காஜல்.
“காதல் கணவரே ,நீங்கள் எத்தகைய உயர்வானவர் என்பதை கண்டு கொண்டேன்.” என கிச்சுலுவை மார்புடன் அணைத்துக்கொண்டு நீண்ட மடலினை எழுதியிருக்கிறார் காஜல்..