ஐந்தே நாளில் 550 கோடி கலெக்சன் என்று பாக்ஸ் ஆபிசில் கே.ஜி.எப் .பதிவு செய்திருந்தாலும் பலர் அந்த வெற்றியை எள்ளலுடன்தான் பார்க்கிறார்கள்.
தற்போது வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி படத்தின் வில்லன் சஞ்சய் தத் சொன்ன பதில் யோசிக்கவைத்திருக்கிறது.
அவரது ரசிகர் கேட்ட கேள்விக்கு தத் சொன்ன அந்த பதில்.
“கேஜிஎப் 2 படத்தை ஒவ்வொருவரும் நாலு தடவையாவது பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு தடவை பார்த்தால் உங்களால் புரிந்து கொள்ள முடியாது ”
இந்தப் பதிலுக்கு கோனார் நோட்ஸ் மாதிரி விரிவுரை எழுதினால் அது விபரீதமாகவே விளங்கும் !
“பலதடவை பார்த்தால்தான் கதையே புரியும் என்கிற அளவுக்கு படத்தை எடுத்திருக்கிறார்கள். பரிதாபமாக இருக்கிறது!”