ரோஜாவை விட ரஜினிக்கு முதல்வர் ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி அதிக முக்கியத்துவம் தருகிறார் என்பது அந்த இரண்டு பெண்களுக்கு இடையில் புகையை கிளப்பிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இது ஆந்திரத்து அரசு அதிகாரச் சண்டையில் ஒரு அத்தியாயம்.!
விடத்தல ரஜினி என்கிற அறிமுகம் ஹெல்த் அண்ட் மெடிக்கல் துறையின் அமைச்சர் .இவருக்கு விசாகபட்டணம் பகுதியின் பொறுப்பு.
ரஜினிக்கு பள்ளிக்கூட அரசியல் தெலுங்கு தேசம் . இங்கிருந்து மாறுபட்ட கருத்துகளினால் ஓஎஸ் ஆர் காங்கிரசில் இணைந்து விட்டவர். சிலக்கல்லுரிப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர்.
முதல்வர் ஜெகனின் நல்லெண்ண புத்தகத்தில் இவருக்கு அதிகப்பக்கங்கள். இதன் காரணமாக பல முக்கிய புள்ளிகள் விலகி நிற்கிறார்கள் ஓட இயலாமல்.!
மெடிக்கல் ,சுகாதாரம் கிடைக்கப்பெற்றதும் தானாகவே உயரமும் கூடி விட்டது,ரஜினிக்கு.!சட்டசபை இவருக்கு முதல் அனுபவம். ஆனால் அணுகுண்டு ஆர்.கே.ரோஜாவுக்கு கிடைக்காத முக்கியத்துவம் ரஜினிக்கு கிடைத்ததால் காரணம் என்ன ? அவசியம் என்ன?
இப்படியெல்லாம் அரசியல் வட்டத்தில் பேச்சுக்கள் !
அவ்வளவாக சொல்லமுடியாத கலாசாரம் ,சுற்றுலாத் துறை ரோஜாவுக்கு.!
ஆக ரஜினிக்கு இனிப்பும் ஆர்.கே ரோஜாவுக்கு காரமும்தான் பொருந்தும் என அரசியலில் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதுவே ரோஜாவுக்கு வலிமையான எதிர்ப்பு உருவாவதற்கு அடித்தளமாக இருக்கலாம் என நம்புகிறார்கள்.!