தமிழ்ப்படங்கள் தலை காட்டிடத் தயங்குவதால்தானோ என்னவோ ,பிற மொழிப்படங்கள் தமிழாடையைப் போர்த்திக்கொண்டு தியேட்டர்களை பிடித்துக்கொள்கின்றன.
குறிப்பாக தெலுங்கு தேசப்படங்கள்.!
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி,முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா, பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய கூட்டணியில் உருவான ‘அன்டே சுந்தரனக்கி’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
இது தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது.!! இதைத்தான் பாரதி பாடிச் சென்றுள்ளானோ!
இந்தப் படத்தின் மூலம் கேரளத்துக் கண்ணழகி நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார்.
நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் ஒரேயொரு ஆண் வாரிசாக சுந்தர் என்கிற கதையின் நாயகனாக நடிகர் நானி நடித்திருக்கிறார்.
இதன் காரணமாகவே அவர் மீது அனைவரும் அதீத அக்கறையும், அன்பையும் செலுத்துகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் தன் மீது காட்டும் அதீத அரவணைப்பை தவிர்ப்பதற்காக ஜோதிடர்கள் கூறும் ஒவ்வொரு ஆலோசனையும் பின்பற்றவேண்டிய அழுத்தத்திற்கு சுந்தர் ஆளாகிறார். இதனால் அவருக்கு பல நெருக்கடிகள் ஏற்படுகிறது.
இந்த தருணத்தில் சுந்தர், லீலா தாமஸ் என்ற தன்னுடைய ஆத்ம தோழியை காண்கிறார். இந்த இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு சாதி, மதம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கிய முரண்பாடாக இந்த அம்சம் மையப்படுத்தப்படவில்லை. நல்லதுதானே !
அண்மையில் வெளியான டீஸர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வானளாவிய அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரிலும், மலையாளத்தில் ‘ஆஹா சுந்தரா’ என்ற பெயரிலும் ஜூன் 10ஆம் தேதியன்று ஒரே சமயத்தில் வெளியாகிறது.