சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 3டி அனிமேஷனில் வெளியாகிய படம் கோச்சடையான். இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.இப்பட உரிமை கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், லதா ரஜினிகாந்த், ஆட் ப்யூரோ நிறுவனத்திடம் ரூ. 10 கோடி பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இதுவரை பட உரிமையும் வரவில்லை, பணமும் வரவில்லை என்று கூறி லதா ரஜினிகாந்த் மீது பெங்களூர் கோர்ட்டில் ஆட் ப்யூரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தனர். . இந்த புகார் மனுவை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து ஆட் பீரோ நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது.இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்ற போது, இந்த மனு குறித்து லதா ரஜினிகாந்த் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று லதா ரஜினிகாந்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்