பேச்சுக் கூலியை வாங்கிக்கொண்டு “சினிமாவைக் காப்பாற்றப்போகிறோம்” என்று பேசுகிறவர்கள் சினிமாவைக் காப்பாற்ற இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள் ?
பாலிவுட்,கோலிவுட் ,டோலிவுட் ,மல்லுவுட் எந்த உட்டாக இருந்தாலும் உருப்படியான பதில் கிடைக்கப் போவதில்லை.
வாய்ச் சொல் வீரர்களால் வாள் சுழற்ற முடியாது. அதே நேரத்தில் நியாயமாக நேர்மையாக நடக்க வேண்டியவர்கள் செயல் படவும் மாட்டார்கள்.
நடிகரும் தயாரிப்பாளருமாகிய சிரஞ்சீவி சினம் கொள்ளாமல் சிந்திக்க சொல்கிறார்.
ஏனென்றால் அவரது வலியைப் பற்றி அவர்தானே அறிந்திருக்கிறார்.!
“பொதுவாக கொரானா கொடுந்தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள்தான் முக்கியமானவர்கள்.
கோலிவுட்டைப் பொருத்தவரை முதல் போட்டு படம் எடுத்தவர்கள் தற்போது தொழிலை கைவிட்டு விட்டார்கள். ஏவிஎம் ,பிரசாத்,வாகினி ,ஆகிய நிறுவனங்களைச் சொல்லலாம்.
பெரு முதலீடு செய்யக்கூடியவர்களில் சன் ,லைகா ,ஏஜிஎஸ் ,போன்றவர்களை சொல்லலாம். ஆனால் இவர்களும் ஆதாயம் கிடைக்கக்கூடிய ஆட்களை வைத்துதான் படம் எடுப்பார்கள்.“ஒரு படத்துக்காக தயாரிப்பாளர்கள் 50 கோடி வட்டி மட்டும் கட்டியிருக்கிறார்கள் .தயாரிப்பு வேலைகளை தாமதப்படுத்துவதால் பெரிய இழப்பு ஏற்படுகிறது. மன வலி அதிகமாவதே இதனால்தான்.!கட்டண உயர்வு என்பது தற்கால தீர்வுதான் ,”என்கிறார் சிரஞ்சீவி.
இவரும் ராம்சரணும் இணைந்து நடித்துள்ள ‘ஆச்சார்யா’ 29 ம் தேதி திரைக்கு வருகிறது. கவலை முன்னதாகவே வந்து விட்டது.