அஜித் நடிப்பில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படக்குழுவினர் தற்போது நாயகியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா தான் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், திடீரென அனுஷ்கா இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.அனுஷ்கா ‘பாகுபலி 2’ உள்படநான்கு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருப்பதாகவும், இயக்குனர் சிவா கேட்ட தேதிகளில் அனுஷ்காவின் கால்ஷீட் இல்லை என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் சிறுத்தை சிவாவின் அடுத்த பார்வை தற்போது காஜல் அகர்வால் மீது விழுந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இன்னும் ஓரிரு நாட்களில் காஜல் உறுதி செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.கதாநாயகி யாரும் இன்னும் கமிட் ஆகாததால் படத்தின் பூஜையில் அஜித் கலந்து கொள்ள வில்லையாம்!