நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் 36 பேருக்கு அவர்கள் கேட்ட பாடங்களை படிக்க நடிகர் சங்கம் மூலமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் அனைவரும் அவர்கள் விரும்பிய பாடங்களை படிக்க வாய்ப்பளித்த வேல்ஸ் பல்கலைகழகம் வேந்தர் ஐசரி கணேசன் , மற்றும் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் வேந்தர் ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது ,
நீங்கள் அனைவரும் ஆசைப்பட்டது போலவே நீங்கள் விரும்பிய பாடத்தை படிக்க அனைவருக்கும் கல்லூரி சீட் கிடைத்ததில் நடிகர் சங்க நிர்வாகிகளாகிய எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் நன்றாக படித்து பெரிய அளவில் சாதித்து பெற்றோருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் . நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதை தவிர்த்து நீங்கள் சாதனை பல புரிந்து நடிகர் சங்கத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் அதே போல் இலவசக் கல்வி வழங்கிய நிர்வாகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமன் , ஹேமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.