அஜித் நடிப்பில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில்,அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா தான் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், திடீரென அனுஷ்கா இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.அனுஷ்கா ‘பாகுபலி 2’ உள்படநான்கு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருப்பதாகவும், இயக்குனர் சிவா கேட்ட தேதிகளில் அனுஷ்காவின் கால்ஷீட் இல்லை என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் அஜித்துக்கு ஜோடியாக உலகநாயகன் மகள் அக்சராஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.மேலும் இப்படத்தில் வெறும் எட்டு கேரக்டர்களையே சுற்றி கதை பின்னப்பட்டுள்ளதாம்.இப்படத்தின் படபிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே நடத்தி முடிக்கபடுள்ளதாம். இதில் அஜித் புலனாய்வு அதிகாரியாக நடிக்கிறார்.இதன் படப்பிடிப்பு வரும் ஆடிபெருக்கு அன்று தொடங்கப்படவுள்ளது.