விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படம் ‘மார்க் ஆண்டனி’ .
ஒரு மாவீரனின் பெயர்.ஆங்கில இலக்கியம் படித்த அத்தனை பேருக்கும் பரிச்சயமாகி இருப்பான். கிளியோபாத்ராவையும் இவனையும் மறக்க முடியாது.
அத்தகைய மாவீரனின் பெயரில் ஒருபடம்.
நிச்சயமாக அவனது வரலாறாகஇந்த மார்க் இருக்க மாட்டான் என்பதை நம்பலாம். இன்ஸ் பிரேசன் என்று அவனைத் தொட்டு கொண்டு கதை அமையக்கூடும். எஸ்.ஏ.சூர்யா இருப்பதால் நம்பலாம் .வாலியை மற்றொரு வடிவில் வெற்றிகரமாக கொடுத்திருக்கிறார் முன்னமேயே!
சரி , இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.
விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த எஸ் வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார் .
விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில் வர்மா ,நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் .
‘இசை அசுரன் (‘ ஓ..இப்படியும் ஒரு பட்டமா? )ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார் .தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது .மக்கள் தொடர்பு ரியாஸ் அகமது.