ரஜினிகாந்த்,தன்ஷிகா,ராதிகா ஆப்தே ஆகியோரது நடிப்பில் உருவான ‘கபாலி’ படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘யூ’ சர்டிபிகேட் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 152 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்ற தகவலும் வந்துள்ளது.
மேலும் ‘கபாலி’ திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுவிட்ட நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஜூலை 22ம் தேதியும், மலாய் மொழியில் மட்டும் ஜூ லை 29ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.