எஸ்.பி.சினிமாஸ் தமிழ்த் திரையுலகில் தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது.
இத்தயாரிப்பு நிறுவனம், அசோக் செல்வனின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமான ‘வேழம்’ திரைப்படத்தை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. கே.போர் கிரியேஷன்ஸ் கேசவன் தயாரித்துள்ள இப்படத்தை சந்தீப் ஷியாம் இயக்கியுள்ளார்,
. இப்படத்தில் ஜனனி ஐயர் மற்றும் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘தெகிடி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அசோக் செல்வனும், ஜனனியும் மீண்டும் திரையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேழம் என்றால் யானை, என பொருள். கதாநாயகன் மற்றும் படத்தில் சம்பந்தப்பட்ட பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஆக்கிரமிப்பு, பாதுகாப்பு மற்றும் நினைவாற்றல் போன்ற உயிரினங்களின் குணாதியங்களை கொண்டுள்ளார்கள். முழு திரைப்படமும் இந்த குணாதியங்களை சுற்றியே சுழல்கிறது
இப்படத்தில் அசோக் செல்வன், ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் ராஜ கிருஷ்ணமூர்த்தி(கிட்டி), சங்கிலி முருகன், பி எல் தேனப்பன், மராத்தி நடிகர் மோகன் அகாஷே மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை- ஜானு சந்தர், ஒளிப்பதிவு- சக்தி அரவிந்த், படதொகுப்பு- ஏ.கே. பிரசாத், கலை இயக்கம்- சுகுமார். , சண்டை- தினேஷ் சுப்பராயன், பி.ஆர்.ஓ.- சுரேஷ் சந்திரா , ரேகா