நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , இந்திய திரை உலக வரலாறில் திருப்புமுனை ஏற்படுத்திய உயர்வான அத்தியாயம் . அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்டு சொந்தக் கட் சி யினராலேயே பழிவாங்கப்பட்டவர்..ஆனாலும் நடிகர்திலகத்தின் புகழை அவர்களால் அளிக்க முடியவில்லை.
அவரது வாரிசுகளாக அண்ணல் இல்லம் அடுத்தடுத்து முத்துகளை தந்து கொண்டிருக்கிறது. இளைய திலகம் பிரபு.
துஷ்யந்த் ,
விக்ரம் பிரபு.
தற்போது தர்சன். இவர் ராம்குமார் கணேசனின் இரண்டாவது மகன்.
படத்தைப்பார்த்தாலே பலருக்கு நாசியில்,செவியில் புகை வந்து விடும் .அந்த அளவுக்கு கவர்ச்சியான முகம். விரைவில் நாயகனாக திரையுலக திருவீதிகளில் வலம் வரவிருக்கிறார்.
தர்சன். புனேயில் நடிப்புப்பயிற்சி எடுத்துக்கொண்டவர். தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்கள் அரங்கேற்றி விட்டு தகுந்த பயிற்சியுடன் இருக்கிறார்.இவரது தாத்தா நடிகர் திலகமும் தெருக்கூத்துகளில் பயின்றவர்தான்.!
பல நிறுவனங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன. விரைவில் முறைப்படி அறிவிப்பார்கள் என தெரிகிறது.