‘ஜீவா படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால்-ஸ்ரீதிவ்யா-இயக்குனர் சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘மாவீரன் கிட்டு’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.இன்று பழனியில்தொ டங்கியுள்ள இப் படத்தின் தலைப்பை வைத்து பார்க்கும்போது இது நிச்சயம் ஒரு போராட்ட வீரனின் வாழ்க்கையாக இருக்கலாம் என்கிறது கோலிவுட் தரப்பு! இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது விஷால் வெளியிட்டுள்ளார். இதில் நடிகர் பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்க, நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் ஏசியன் சினி கம்பைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது,’மாவீரன் கிட்டு’ இது ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் அல்ல. 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம் தான் இது…என்கிறார்!