மாலை நேரத்தில் மனைவியின் கொண்டையில் மல்லிகைப்பூ இருந்தால் அது கணவனின் வரவேற்புக்காக வைக்கப்பட்ட வெல்கம் ஆர்ச் !
அதே மல்லிகைப்பூ பஸ் நிறுத்தங்களில் பலான பெண்களின் கொண்டைகளில் இருந்தால் அந்தப்பெண் யாருக்கோ வலை வீசுகிற வாடகை மனைவி என்பதாக பொருள்.
தமிழ்ச்சினிமாவில் வாடகைப்பெண்களைப் பற்றிய கதைகள் வந்திருக்கின்றன. இயக்குநர் சிகரம் பாலசந்தர் சமூக பொறுப்பு உணர்ச்சியுடன் அத்தகைய ஒரு பெண்ணின் கதையை சொல்லியிருந்தார்.
சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாகப் பேசுகிறது. பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி நாராயணன் தயாரித்திருக்கிறார்.தற்போது 21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம்தான் “மாலைநேர மல்லிப்பூ”.நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த் கலந்து கொண்டு பேசும் போது, “ இந்தப் படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் 21 வயசுலயே நினைக்க முடியாத ஒரு சப்ஜெக்ட் பர்ஸ்ட் படத்துல எடுத்ததுக்காகவே பாராட்டவேண்டும்.
இங்கு காட்டிய சின்ன சின்ன க்ளிப்ஸ் பார்க்கும் போது முதல் பட இயக்குநர் போலத் தெரியவில்லை. பல படங்களை எடுத்த அனுபவமிக்க இயக்குநர் எடுத்த மற்றொரு படம் போலத்தான் இது இருக்கிறது. இதைத்தான் நான் இயக்குநரும் நண்பருமான கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறினேன். “நாமெல்லாம் ரொம்ப காலம் உதவி இயக்குநராகவே கழித்து விட்டோம்” என்று சிரித்துக் கொண்டோம்.
இந்தப் படத்தோட இயக்குநரைப் பாராட்டுவது போலவே இப்படத்தை தயாரித்திருக்கும் இயக்குநரின் தாய் விஜயலெக்ஷ்மிக்கும் என் பாராட்டுக்கள். ஏன் என்றால் மகனின் முதல் படம், தலைப்பு ‘மாலை நேர மல்லிப் பூ” அதைப் புரிந்து கொண்டு அவர்களின் தாய் அதை தயாரிப்பதென்பது மிகப் பெரிய விசயம். என்றார் சஞ்சய்நாராயணன்,
’நெடுநல்வாடை’ பட இயக்குநர் செல்வக்கண்ணன் பேசியதை தொடர்ந்து இயக்குனர் சஞ்சய் நாராயணன் பேசினார். அனைவர்க்கும் மனமுருக நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் பேசும் போது, ” இயக்குநர் பாலச்சந்தர் அரங்கேற்றம் படம் எடுப்பதற்கு முன்னர் பல படங்கள் எடுத்துவிட்டார். ஆனால் இப்படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் தன் முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையில் தாய் மகனுக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பை தன் கதையாக எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.
அந்த தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன். இயக்குநரை முதலில் நேரில் பார்க்கும் போது, அவருக்குள் என்ன மாதிரியான விசயங்கள் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. இன்று அவர் மேடையில் பேசும் போதும், அவரின் படைப்பைப் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருக்கிறது. இவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. பார்ப்பதற்கு கார்த்திக் சுப்புராஜ் போல இருக்கும் இந்த இயக்குநர் அவரைப் போலவே பெரும் புகழ் அடைய வாழ்த்துகிறேன்.
இப்பொழுது கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளம் வளர்ந்து வருகிறது. எனவே யார் மூலமாக இப்படத்தை வெளியிடுவது என்பதில் கவனமாக இருக்கவும். எனக்குத் தெரிந்து இதை ஓடிடி தளத்தில் வெளியிடுவது சிறந்தது” என்று கூறினார்.
இயக்குநர் சுப்ரமணிய சிவா பேசும் போது, “ஊரில் ‘டேய் இதெல்லாம் சின்னப் பசங்க பாக்குற வேலையாடா..? என்று பேசுவார்கள். ஆனால் இது போன்ற படங்களை சின்ன வயதில் தான் எடுக்க வேண்டும். ஏனென்றால் சின்ன வயதில் காமம் காதல் வந்தால் தான் அது சரி. ஒரு வயதுக்கு மேல் காதல் காமம் வந்தால் அது மனநோய். ஆக இது தான் காதல் மற்றும் காமத்திற்கான வயது. எனவே அந்த வயதிற்கான படத்தையே சஞ்சய் நாராயணன் எடுத்திருக்கிறார். நம் தமிழ் திரையுலகின் கமர்ஸியல் மாஸ்டர் என்றால் அது இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சார் தான். அவர்களுடைய பாராட்டும் இப்படத்திற்கு.கிடைத்திருப்பது வரவேற்புக்குரியது “என்றார் .