
அறிமுக நாயகி ரேவதியுடன் கௌதம் கார்த்திக் நடித்துள்ள இப்படம், இந்திய சுதந்திரத்தின் உச்சக்கட்டத்தின் போது, ஒரு கிராமத்தில் ஒரு துணிச்சலான வீரன் பிரிட்டிஷ் படைகளுடன் போரிடும் கதையைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அழகிய பகுதிகளில் படமாக்கப்படும் இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது, தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இயக்குநர் என்.எஸ் .பொன்குமார் இந்த கதையைப் பற்றி என்ன சொல்கிறார்?
“இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் என்றால் என்ன’ என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்டவர், ஏங்கும் இதயம் கொண்ட கதாநாயகி, தங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஏளனமாகச் சிரிப்பவர்கள், மற்றும் காதலிக்கும் வயதான தம்பதிகள் இந்த கதையின் கதாபாத்திரங்கள். இந்தக் கதாப்பாத்திரங்களைச் சுற்றிச் சுழலும் இந்த கதை, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அழுத்தமான திரைக்கதையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது”என்கிறார்.