என்னென்ன மாற்றங்களோ எனும் சொல்கிற அளவுக்கு நயன்தாரா திருமணம் குறித்த செய்திகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு இருக்கிறது . அவர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்ற வரை செய்திகளும் உரு மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும்.!
ஏனெனில் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்.
இப்போது கூட தனியார் ஊடகம் ஒன்று தங்களிடம் விக்கி ஜோடி சொன்னதாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
சிலம்பரசன் ,பிரபு தேவா ஆகியோருடனான காதல் வாழ்க்கையை முறித்துக்கொண்டு தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்வதாக ஊடகங்கள் சொல்லி வந்தன.இதை காதல் ஜோடியும் மறுக்கவில்லை. மாறாக தங்களுக்கு திருமணம் நடப்பது உறுதி ,நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்பதை அவர்களே அறிவித்தார்கள்.
இந்த நிலையில்தான் வருகிற ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் திருப்பதியில் இல்லை ,மாமல்லபுரத்தில் இருக்கிற ஆடம்பர ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடக்கப்போவதாக செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள் .
திருமண அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவர்களது திருமண நிகழ்ச்சியை ஓடிடி நிறுவனம் ஒளிபரப்புவதற்கான உரிமையை வாங்கியிருக்கிறது.