ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் ரீலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் அப்படத்தின் விளம்பரங்கள் பெரிய அளவில் செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக, ‘கபாலி’ படத்தோடு ஏர்லைன் பார்ட்னராக இணைந்த ஏர்-ஏசியா விமான நிறுவனம் அந்த நிறுவனத்தின் விமானத்தில் ‘கபாலி’ படத்தின் போஸ்டரை ஒட்டி, ஆகாயம் வரை பறக்க வைத்தது. இந்நிலையில், தற்போது பிரபல பைனான்ஸ் நிறுவனமான ‘முத்தூட் பின்கார்ப்’ நிறுவனமும் ‘கபாலி’யுடன் கைகோர்த்துள்ளது. இந்நிறுவனம் ‘கபாலி ரஜினி’ உருவம் பொரித்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. அந்த நாணயத்திற்கு ‘Lucky Superstar Coin’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த நாணயத்தில் ரஜினியின் உருவம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி, கபாலி போன்றவையும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவை தற்போது அவர்கள் தொடங்கியுள்ளனர்.5,1௦, 2௦ கிராம்களில் இது கிடைக்கும் என அன் நிறுவனம் அறிவித்துள்ளது!