‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’ படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
சினிமா சார்ந்த விழாக்களின் போது திருட்டு வீசிடி பிரச்சனையை பற்றி
தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும், அரசுக்கும் பகிரரங்கமாக
பரப்பபரப்பான வேண்டுகோளை முன்வைப்பார். விரக்தியின் உச்சமாக
‘திருட்டு வீசிடியை சட்ட பூர்வமாக்கி விடுங்கள்’.’ என அண்மையில்
நடைபெற்ற ‘பகிரி’ பட விழாவில் பகீரச் செய்தவர்.
இப்படி தொடர்ந்து போராடிய தயாரிப்பாளர் கே.ராஜன்,சுரேஷ் காமாட்சி,
விஷால் உள்ளிட்ட பலரின் வேண்டுகோள்களுக்கு, தற்போது திருட்டு
வீசிடியை ஒழிக்க ஒரு நல்ல முயற்சியை கையிலெடுத்திருக்கிறார், தமிழ்த்
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு. புதிய
படங்கள் திரையிடப்படும் அதே நாளில் கிட்டத்தட்ட 170 இணைய தளங்களும்
தங்களுடைய இணையதளங்களில் சட்டவிரோதமாக படங்களை வெளியிட்டு
விடும். இந்த இணைய தளங்களை முடக்குமாறு சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோதமாக
செயல்படும் இணைய தளங்களை முடக்குமாறு மத்திய அரசுக்கு அதிரடி
உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ஒட்டுமொத்த திரையுலகும்
நிம்மதியடைந்துள்ளது.