வெகுநாள் கழித்து திரையில் முகம் காட்டுகிறார்கள் பரத் ,வாணி போஜன் இருவரும்.! அவர்கள் நடித்து வெளியாகவிருக்கிறது ‘மிரள் ‘ ஹார்ரர் படம் !! இந்த படத்தின் முதல் பார்வை சுருளை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
ஆக்ஸஸ் பிலிம் பாக்டரி ஜி டில்லிபாபு தயாரித்திருக்கிற இந்த படத்தில் மீரா கிருஷ்ணன்,கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் தமிழ்த் திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்குமாம், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்
தொழில்நுட்பக்கலைஞர்களின் விபரம்:
எம்..சக்திவேல் (கதை- வசனம்-இயக்கம்), பிரசாத் (இசை), சுரேஷ் பாலா (ஒளிப்பதிவு), கலைவாணன் (எடிட்டர்), மணிகண்டன் சீனிவாசன் (கலை), டேஞ்சர் மணி (ஸ்டண்ட்), சச்சின் சுதாகரன்-ஹரிஹரன் (ஒலி வடிவமைப்பு), கவின் முதல்வன் ,அரவிந்த் மேனன் ( ஒலி கலவை), ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் (ஆடை வடிவமைப்பாளர்), முகமது சுபையர் (ஆடைகள்), வினோத் சுகுமாரன் (மேக்கப்), முத்து – (கலரிஸ்ட்), கிரண் ராகவன் – (VFX மேற்பார்வையாளர்), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) , சந்துரு – தண்டோரா (பப்ளிசிட்டி டிசைன்), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு), (புரமோஷன் மற்றும் மார்க்கெட்டிங்), பால முருகன் (தயாரிப்பு மேலாளர்).