எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது எதார்த்த நடிப்பாலும்,
இயல்பான பாவனையாலும் ரசிகர் மத்தியில் பாராட்டுகளை பெற்ற
ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது சிபிராஜுடன் இணைந்து நடித்திருக்கும்
திரைப்படம் தான் கட்டப்பாவ காணோம். இயக்குனர் அறிவழகனின்
இணை இயக்குனரான மணி செய்யோன் இயக்கியிருக்கிறார்விண்ட்
சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து வருகிறது.
கட்டப்பாவா காணோம் படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது..
இதுவரை நான் நடித்துள்ள சவாலான கதாப்பாத்திரங்கள் யாவும், எனக்கு
நற்பெயரை சம்பாதித்து தந்திருக்கிறது. ஆனால் என்னுடைய நிஜ
வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் வண்ணமாக அமைந்த
கதாப்பாத்திரங்கள் கொஞ்சம் குறைவு தான். ஆனால் இந்தப்படத்தில்
என்னுடைய வயதையும், என் அன்றாட வாழ்க்கையையும் ஒட்டியே
அமைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி.
இந்த படத்தில் சிபிராஜிற்கு ஜோடியாக நடிக்கும் என்னுடைய
கதாப்பாத்திரத்தின் பெயர்மீனு. இன்றய காலக்கட்டத்தில் எப்படி சராசரி
மாடர்ன் பெண்கள் இருக்கிறார்களோ, அப்படியே என்னுடைய மீனு
கதாப்பாத்திரமும் இருக்கும். கிராமத்து பெண் வேடம், சிட்டி பெண் வேடம்
என எந்த வித்தியாசமும் எனக்கு கிடையாது. இரண்டுமே சரிசமமாய் என்
மனதோடு எப்போதும் ஒட்டி இருக்கும் கதாப்பாத்திரங்கள் தான்.என்று
கூறினார்.