நெஞ்சுக்கு நீதி திரைப்பட வெற்றி கொண்டாட்டம் !
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ஜீ ஸ்டுடியோஸ் ,பே வியூ புராஜக்ட் ரோமியோ பிக்கர்ஸ் இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.
சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தது.
இந்நிகழ்வினில் கலை இயக்குனர் மெவின் ,நடிகர் மயில்சாமி ,எழுத்தாளர் தமிழ் ,எடிட்டர் ரூபன் ,நடிகை யாமினி ,நடிகர் இளவரசு,நடிகர் ஆரி ,நடிகை தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்பின்போது நடந்த நிகழ்வுகளை சொல்லி மகிழ்ந்தனர். யார் யாருக்கெல்லாம் நன்றி சொல்லவேண்டுமா அவர்களுக்கெல்லாம் நன்றியை சொல்லி மகிழ்ந்தனர்.
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியதாவது…
பாடலாசிரியராக இந்த மேடையில் தான் அறிமுகமானேன். எல்லோருக்கும் இந்த மேடையில் நன்றி கூறிகொள்கிறேன். இந்த படத்தை இயக்க நான் சரியான ஆள் என என்னை தேர்ந்தெடுத்த உதய் சாருக்கு நன்றி. உதய் சார் எனக்கு இந்த படத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார். கனா படத்தில் நான் புதுமுகங்களை பயன்படுத்தியது போல், இந்த படத்திலும் இருக்க வேண்டும் என உதய் சார் கூறினார். இந்த படத்தில் வசனகர்த்தா தமிழ் பெரும் உழைப்பை கொடுத்துள்ளார். யுகபாரதி அவர்களுக்கு நன்றி, அவர் பல விஷயங்களை கற்றுகொடுத்தார். வட்டார மொழிக்கு எனக்கு பலர் உதவினர், அவர்களுக்கு நன்றி. இந்த படம் சமூகநீதி பேசும் படம், அதற்காக தான் நாங்கள் அனைவரும் உழைத்துள்ளோம். நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பு இந்த படத்திற்கு பொருத்தமான ஒன்று. அதை வாங்கிகொடுத்த உதய் சாருக்கு நன்றி. உதவி இயக்குனர்கள் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உடைய பங்களிப்பு முக்கியமானது. இந்த படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. என்னுடைய மனைவிக்கு நன்றி. இந்தப்படத்தை செய்ய அவர் தான் தூண்டுகோலாக இருந்தார் அனைவருக்கும் நன்றி.”என்றார் .
சட்டமன்ற திமுகழக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…
“மனதுக்கு நேர்மையான படத்தை கொடுத்துள்ளோம். அதற்கு நீங்கள் கொடுத்த பாராட்டிற்கு நன்றி. தயாரிப்பாளர்கள் இருவருக்கும் நன்றி. எனக்கு எந்தவிதமான கஷ்டம் இல்லாமல் படம்பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த ரமேஷ் திலக்கிற்கு நன்றி. ரமேஷ் திலக் மனைவிதான் அவர் உடன் நடிக்கிறார் என்பது தெரியாமல் அவரை சந்தேகப்பட்டேன். கலை இயக்குனர் உடைய பணி எல்லாராலும் பாராட்டபட்டது. சுரேஷ் உடைய கதாபாத்திரம் தான் இந்த படத்தின் உயிர். தமிழரசு இந்த படத்தில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி. எடிட்டர் அவர் உழைப்புக்கு நன்றி. நடிகை யாமினிக்கு நன்றி. நடிகர் இளவரசு உடன் நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்தபிறகு தான் படத்தில் ஆரி தான் ஹீரோ என்று தெரிந்தது. தன்யா அவர்களுக்கு நன்றி. படத்தின் இயக்குனர் படத்தை தமிழுக்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் தான். ஜெயித்து காட்டிவிட்டார் அருண். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி அருண் மற்றும் அவரது மனைவிக்கு சமர்ப்பணம். நன்றி”என்று தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் .