சிலருக்கு சில ஆசைகள் .
அந்த காலத்தில் தியாகராஜ பாகவதர் மீது ரசிகைகள் கொள்ளை ஆசை கொண்டு வாழ்ந்ததாக சொல்லுவார்கள்.
சினிமாவுக்குப் போன சித்தாளு கதை வழியாக ஜெய காந்தன் சில கருத்துகளை சொல்லியிருந்தார்.நடிகைகள் மீது பலான ஆசை கொண்ட ரசிகர்களை இன்றும் காணலாம்.
ஆக, இந்த மாதிரியான உலகத்தில் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி தன்னுடைய ஆசையை வெளிப்படையாக சொன்னது பாராட்டுக்குரியதுதான்.
பிரபலமாகிவரும் இசை அமைப்பாளர் அனிருத்.
இவருடன் சில பிரபலங்களை இணைத்து செய்திகள் வந்ததுண்டு.
ஆண்டிரியா ,டிடி ,கீர்த்தி சுரேஷ் .
இவர்களில் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் அதற்காக ,கடற்கரையோரத்தில் வசந்த மாளிகை கட்டியிருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்ததுண்டு.
வந்த வதந்திகள் அனிருத்தை பெண் வேட்டையாளர் என்பதாகவே சித்தரித்தன.
இப்படிப்பட்டவருடன் பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தி என்பவர் டேட்டிங் செல்ல விரும்புவதாக சொல்லியிருக்கிறார். பீஸ்ட் படத்திலும் பாடியிருக்கிறார்.
“அனிருத் ,சூர்யா ,ரன்வீர் சிங் ஆகியோரில் யாரை முத்தமிட்டு திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள் ?”என்று கேட்டதற்கு ஜோனிடா சொன்ன பதில் “நான் அனிருத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்பதாகும்.