தில்லுக்கு துட்டு படத்தைத் தொடர்ந்து சந்தானம், தற்போது இயக்குனர் செல்வராகவனுடன் கை கோர்த்துள்ளார். இது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நகைச்சுவைமுன்னணி நடிகராக கருதப்படும் சந்தானம், தமிழ்த் சினிமாவின் வித்தியாசமான படைப்பாளியாக கருதப்படும் இயக்குனர் செல்வராகவன் என முரண்பட்ட கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உயர்த்ஆரம்பித்துவிட்டது.இக்கூட்டணி குறித்து சந்தானம் கூறியதாவது,”பொதுவாகவே செல்வராகவன் சார் என்றாலே, ‘சீரியஸான மனிதர் தான்’…’அவர் படங்கள் எல்லாம் உணர்ச்சிகரமாக தான் இருக்கும்’… போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. செல்வராகவன் சாரிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. உணர்ச்சிகரமான படங்களாக இருந்தாலும், அந்த நகைச்சுவை உணர்வை அவரது திரைப்படங்களில் நம்மால் உணர முடியும்…”என்கிறார் நடிகர் சந்தானம்.