தமிழ்ச்சினிமாவின் டான்ஸ் மாஸ்டர்களில் பிருந்தாவுக்கு தனித்துவம் உண்டு.
அவர் தற்போது இயக்குநராகவும் களம் இறங்கியிருக்கிறார். இவர் இயக்கம் படத்துக்கு ‘தக்ஸ் ‘ என பெயரிடப்பட்டிருக்கிறது.
முன்னணி நட்சத்திரங்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், தேசிங் பெரியசாமி, இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன், திரையுலக வணிகத்தை துல்லியமாக அவதானிக்கும் நிபுணர்களான பாக்ஸ் ஆபிஸ் எண்டர்டெய்மெண்ட்டைச் சேர்ந்த தரண் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இணைந்து முதல் போஸ்டரை வெளியிட்டனர்.
‘ தக்ஸ்’ என படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி குமரி மாவட்டத்தை களப்பின்னணியாகக் கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையை இயக்குகிறார் பிருந்தா. .
இந்தி நடிகர் ஹிர்ருது ஹாரூன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் சிம்ஹா முழு ஆக்ஷனுடன் இறங்கியிருக்கிறார்.
மேலும் நடிகர் ஆர். கே. சுரேஷ், தக்ஸுகளை எதிர்த்து போரிடும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இவருடன் நடிகர் முனீஸ்காந்த், ‘தக்ஸ்’ கூட்டத்தில் ஒருவராக களம் இறங்குகிறார்.
நடிகர் அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன் மற்றும் ரம்யா சங்கர் ஆகியோரும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
பிரியேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, சாம் சி. எஸ். இசையமைக்கிறார். பட தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் ‘ தக்ஸ் ‘ படத்தில் மூன்று பிரபலமான முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்தப் படத்தின் தயாரிப்புஒருங்கிணைப்பாளராக முத்து கருப்பையா பணியாற்ற, யுவராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும், மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றுகிறார். தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்நிறுவனம் தமிழில் வெளியாகி, வசூலில் வெற்றியைப் பெற்ற ‘விக்ரம்’ மற்றும் ‘ஆர். ஆர். ஆர்.’ ஆகிய படங்களை கேரளாவில் விநியோகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.