தன்னைத்தானே கொன்று விடுகிற மலர்கள் இருக்கிறதா ?
. ஆனால் மங்கையர் சிலர் இருக்கிறார்கள். மனதளவில் செத்து விடும் அவர்கள் உயிர் துறக்க தேர்வு செய்யும் ஒரே வழி தற்கொலை.!
பாலிவுட் ,டோலிவுட் ஆகியவைகளை சேர்ந்த பல பிரபலங்களுக்கு பேஷன் டிசைனராக இருந்தவர்தான் பிரத்யுஷா .சிறந்த தொழில் கலைஞர்.
ஹைதராபாத்திலுள்ள ஆடம்பர மாளிகையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பணக்காரர்கள் வாழ்கிற பூமி அது பஞ்சாரா ஹில்ஸ் .
பாத்ரூமில் சவமாக கிடந்தது அந்த பட்டு மேனி ,பட்டுப் போனது.
கதவைத் தட்டியும் திறக்கவில்லை என்றால் உள்ளே உயிருள்ள எவரும் இல்லை என்றுதானே அர்த்தம்?
ஒரு பாட்டில் கார்பன் மோனாக்சைட் பாத்ரூமில் ! அதுதான் உயிர் கொல்லியா?
எழுதி வைத்துள்ளதாக சொல்லப்படுகிற கடிதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
“தனித்த வாழ்க்கை. பெற்றோருக்கு இனியும் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே இந்த கடுமையான ,கடைசி முடிவினை எடுத்ததற்கு வருந்துகிறேன்” என்பதாக எழுதியிருக்கிறாராம்.