விக்ரம் .
வெளியான நாளிலிருந்து வெள்ளிப்பணங்களை அள்ளிக்கொண்டிருக்கிறது. அண்டை மாநிலத்தவர் வியப்புடன் அந்த வெற்றியைப் பார்க்கிறார்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளித்திரையின் வெளிச்சத்துக்கு வந்த உலகநாயகனால் எப்படி பிளாக் பஸ்டர் நாயகனாக மாற முடிந்தது?இந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது என ஆராய்கிறார்கள்.
நமக்கு பெருமையாகவும் கர்வமாகவும் இருக்கிறது.இது நமக்கு கிடைத்த கவுரவமாக இருக்கிறது.
நேற்று 11 ..ஜூலை .
ஆந்திரத்தின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய இல்லத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ,இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர்க்கு சிறப்பு விருந்து (இன்டிமேட் டின்னர்.) கொடுத்தார். இந்த டின்னரில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
“அப்சல்யூட் ஜாய் ,செலெப்ரேடிங் அண்ட் ஹானரிங் எனது அருமையான நண்பர் கமல்ஹாசனின் மாபெரும் வெற்றிக்கு !விக்ரமின் வெற்றியை எனது நண்பர் சல்மான் கானுடன் நேற்றிரவு எனது இல்லத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறேன். எவ்வளவு சிறப்பான படம்தெரியுமா விக்ரம்.?திரில்லிங்.!எனது அருமை நண்பர் கமல்ஹாசன் மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன்.”என சொல்லியிருக்கிறார் சிரஞ்சீவி.
கமல்ஹாசன் ,சல்மான்கான் ,லோகேஷ் கனகராஜ்க்கு மாலைகள் அணிவித்து வரவேற்றார் .
விக்ரமின் வெற்றியில் கமல்ஹாசன் ,விஜயசேதுபதி ,பகத் பாசில் ,சூர்யா ,சந்தானபாரதி ,காளிதாஸ் ,நரேன் ஆகியோருக்கும் பங்கு உண்டு .