தமிழ்த்திரை உலகில் நிலவிய மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிந்தவர் டி .ராஜேந்தர்.
முதல் படத்திலேயே இசையிலும் இயக்கத்திலும் எழுத்திலும் சாதனை படைத்தவர்.
அரசியல் இவருக்கு இசைவாக இல்லாமல் இருந்தாலும் அதிலும் சிறந்து விளங்கியவர். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவியில் கலைஞர் ஆட்சியில் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார். தமிழீழத் தமிழர்களுக்காக உண்மையாக குரல் கொடுப்பவர்கள் தந்தையும் ,மகன் சிலம்பரசனும்.!
அண்மையில் ஏற்பட்ட திடீர் நலக்குறைவு , டி .ஆரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
தமிழ்த்திரையில் முன்னணி நடிகராகத் திகழும் சிலம்பரசன் தன்னுடைய தந்தையின் உயர் சிகிச்சைக்காக முன்னதாகவே அமேரிக்கா சென்று மருத்துவமனையை தேர்வு செய்திருக்கிறார்.
நாளை இரவு விமானத்தில் ராஜேந்தர் குடும்ப சகிதமாக அமேரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்துப்பேசுகிறார் என்பது சிறப்பு செய்தியாகும். எல்லாமே பகிரங்கம் தான் .ரகசியம் கிடையாது இவரது வாழ்க்கையில்.!
சகோதர ,சென்று வா.வெற்றியைத் தவிர வேறொன்றும் காணாத சாதனையாளனே ,நலமுடன் திரும்பி வா.!
என்றும் ,
உன் சகோதரன்,
தேவி மணி .