காரி என்பது சனிக்கிழமையையும் குறிக்கும். சில கிராமிய தெய்வங்களையும் குறிக்கும்.! அய்யனார் மற்றும் கருப்பசாமியையும் மக்கள் காரி என்றே அழைப்பர்.
ஒரு கிராமியக்கதையைச் சொல்கிறபோது பண்பாடும் வாழ்வியலும் ஒன்றாகிவிடுகிறது. இந்த வகையான படங்களில் நடிப்பதற்கு சசிகுமார் ,சமுத்திரக்கனி என சிலரே இருக்கிறார்கள்.கதை சொல்வதற்கும் சிலரே வருகிறார்கள்.
காவல் தெய்வத்தின் பெயரில் உருவாகும் படத்தில் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இவர் பிறந்து வளர்ந்த அந்த கிராமத்தில் கதைகள் அதிகம் உண்டு.மதுரை -மேலூர் வழியில் ஒத்தக்கடை அருகில் இவரது ஊர் இருக்கிறது.
காரி படத்தை அறிமுக இயக்குநர் ஹேம்ந்த் இயக்கியுள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்..லக்ஷ்மன் குமார் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
கதாநாயகியாக பார்வதி அருண் நடித்துள்ளார்.இவர் மலையாளத்தில் செம்பருத்திப்பூ, மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த 21ஆம் நூற்றாண்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.
வில்லனாக பிரபல நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடித்திருக்கிறார்.
இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
வீரமாக மோதி ஜெயிக்கப் போவது ஜல்லிக்கட்டு காளையா?? இல்லை பந்தயக் குதிரையா?? என்பது போல சசிகுமாரையும் வில்லன் ஜேடி சக்கரவர்த்தியையும் இந்த ட்ரெய்லரில் இரு எதிர் துருவங்களாக உருவகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்கும் என எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு செமத்தியான விருந்தாக இருக்கும் என்பதை இந்த டிரைலர் சொல்லாமல் சொல்கிறது.
இருபது மணி நேரத்தில் ஒன்றரை மில்லியன் பார்வையாளர்கள் இந்த ட்ரைலரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.