தமிழ்த்திரையுலகில் கடந்த 2015ம் ஆண்டு, விஜய் இயக்கத்தில் வெளியான ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து கிடைத்து வரும் பட வாய்ப்புகளால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ்,மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத்திரைப்படமான ‘மஹாநடி’ படத்தின் மூலம் தேசியவிருதையம் பெற்றார்
இதையடுத்து தென்னிந்திய நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள கீர்த்தி சுரேஷ்,தனது செல்ல நாய்குட்டியுடன் தனி விமானத்தில் ஊர் சுற்றியிருக்கிறார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். அப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களால் பெரும் வைரலாகி வருகிறது.
இது குறித்து நெட்டிசன்கள் பலரும்,”பணம் கோடிக்கணக்கில் கொட்டி கிடந்தா இப்படித்தான் செய்ய தோன்றும என்றும், எல்லாம் காலக்கொடுமை கதிரவா என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.