இதுநாள் வரை நமக்கு எட்டாக்கனியாக இருந்த ஆஸ்கார் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழியாக இந்தியத் துணைக் கண்டத்துக்கு பெருமை சேர்ந்தது. தமிழன் நெஞ்சு நிமிர்த்தினான்.
தற்போது பச்சைத்தமிழன் சூர்யாவினால் மற்றுமொரு ஆஸ்கார் பெருமை வந்தடைந்திருக்கிறது.
ஆஸ்காரின் சிறப்புக்குரியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அகிலத்துக்கு அறிமுகம் செய்கிற குழுவில் தமிழ்ச்சினிமாவைச் சேர்ந்த சூர்யா சிவகுமார் இணைக்கப்பட்டிருக்கிறார்.
சிறந்த மாணவர்களுக்கு தன்னால் இயன்றளவுக்கு உதவி செய்து கை தூக்கிவிடுகிற அகரம் பவுண்டேசனின் அஸ்திவாரம் சூர்யாவின் தந்தை சிவகுமார் போட்டது. இதை செம்மையாக நடத்தி செல்கிறார் சூர்யா.கல்வியை அண்ணன் சூர்யா கவனித்துக்கொள்ள ,விவசாயிகளை காத்து வருகிறார் தம்பி கார்த்தி .
ஆஸ்கார் கமிட்டியில் சூர்யா ,பாலிவுட் கஜோல் ,கதாசிரியர் ரீமா ககோடி ஆகியோர் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர உலக அளவில் 397 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சூர்யாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இவரது வாழ்த்தில் “வானமே எல்லை”என்கிற வார்த்தைகளுக்கு எத்தனையோ புகழாரங்கள் உண்டு.
சினிமா முரசமும் சூர்யாவை வாழ்த்துகிறது. வானம்தான் எல்லை இன்னும் சிறகடித்து செல்லுங்கள்.!