ஆந்திராவில் இவரை ‘தீப்பொறி ரோஜா’வாகவே பார்க்கிறார்கள்.மேடைப்பேச்சில் குண்டூர் மிளகாயை காட்டிலும் காரம் இருக்குமாம். இவரது வாயில் விழுகிற அரசியல்வாதி நார் நாராக கிழிபடுவான் என்கிறார்கள். நாட்டில் அப்படி ,வீட்டில் எப்படி ?
ஆர்.கே.செல்வமணிதான் சொல்ல வேண்டும்.!
சரி மேட்டருக்கு வருவோம்.
அண்மையில் பிரதமர் மோடி ஆந்திராவுக்கு வந்திருந்தார்.
விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார் .பீமாவரத்தில் விழா நடந்தது.
இந்த விழாவுக்காக வந்த பிரதமரை வரவேற்க விமான நிலையம் சென்றிருந்த ரோஜாவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவ்வளவுதான் ரோஜா வானத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டார்.சிரஞ்சீவியைப்போல அடக்கமாக .இருக்க முடியவில்லை.
அதன் விளைவு ,விழா மேடையில் வெளிப்பட்டது.
பிரதமர் பேசி முடித்து வெளியேறுகிற தருணத்தில் மோடியிடம் சென்று ‘செல்பி’ எடுக்கவேண்டும் என்றதும் உயர் அதிகாரிகளுக்கு தர்ம சங்கடமாகி விட்டது. முதல்வர் ஜெகன் மோகனுக்கு முகத்தில் காரம் தெரிந்தது.
மோடியும் அட்ஜஸ் செய்து கொண்டு செல்பிக்கு போஸ் கொடுத்தார்.
ஆனால் ரோஜாவின் செல்பி தாக்கம் தீரவில்லை.
பிரதமர் கீழே இறங்குகையில் மறுபடியும் ‘செல்பி ப்ளீஸ் ‘ என்றதும் காட்டமாகி விட்டார் முதல்வர்.
“உங்களின் செல்பி மோகத்தை நிறுத்தி விடுங்கள்” என்று சிடுசிடுத்ததும் ரோஜா கப்சிப் !
மந்திரி பதவிக்கு ஒரு மரியாதை இருக்கிறது.!