பொன்னியின் செல்வன் இன்னும் திரைக்கு வந்த பாடில்லை.அமரர் கல்கியின் புகழ் வாய்ந்த வரலாற்று நாவல்தான் பொன்னியின் செல்வன். மக்கள் திலகம் ,உலகநாயகன் ஆகியோர் முயன்றும் முடியாமல்போனதை இயக்குநர் மணிரத்னம் செயல்படுத்தியிருக்கிறார் திரை வடிவில்.!
பொன்னியின் செல்வன் சைவன். சோழப்பேரரசு சைவத்தை அதாவது சிவனை போற்றும் அடியார்களாகவே வாழ்ந்தனர்.
அவர்களில் ஒருவர்தான் ஆதித்த கரிகாலன் .
இந்த கேரக்டரை பொன்னியின் செல்வனில் ஏற்று நடித்திருக்கிறார் சீயான் விக்ரம். நல்ல தேர்வு.
இந்த கேரக்டரின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியாகியது.
இங்கேதான் சிக்கலே.!
“ஆதித்த கரிகாலனுக்கு நாமத்தை போட்டதேன் ?அவன் சிவனை வணங்குகிற சைவன். தினமும் பிரகதீஸ்வரரை ( பெருவுடையார் ) வணங்கியவன். அவனுக்கு ஒற்றை நாமத்தை போட்டு மதம் மாற்றும் முயற்சியை மணிரத்தினம் ஏன் செய்கிறார்?இது வரலாற்று பிழை.”என சிவ மதம் சார்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் . ஸ்ரீரங்கத்து யானைக்கு வடகலை நாமமா ,தென்கலை நாமமா என்கிற பிரச்னை எழுந்து கோர்ட்டுக்கு போன கதை எல்லாம் நினைவுக்கு வருகிறது.
பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படுமா ?