நடிகர் விஷால் பற்றிய செய்திகள் அவ்வளவாக வருவதில்லை.
அவரது படங்களும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.
காதலிலும் தோல்வி .அனிஷா அல்ல ரெட்டி என்கிற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து அது முறிந்துபோனதும் ஒரு சோகம்தான்.
அண்மையில் படப்பிடிப்பில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றிருக்கிறார் விஷால்.
“புதிய நடிகர் சங்க கட்டிடத்தில்தான் கல்யாணம் செய்து கொள்வேன் “என்று சபதம் செய்திருந்தார் .ஆனால் அது தற்போதைக்கு சாத்தியமில்லை என்று சொல்லலாம்.
வேறு கல்யாண மண்டபங்கள் ஏதாவது ஒன்றில் நடத்திக்கொள்வது புத்திசாலித்தனம்.“என்னவோய் பொண்ணு பார்த்திட்டாரா விஷால்? “என ஆச்சரியப்பட்டு கேட்பது காதில் விழுகிறது.
விஷால் சொல்லியிருக்கிறார்.அவர் காதலில் விழுந்திருப்பதாக.!
“அந்த புண்ணியவதி யார் ?”
“விரைவில் சொல்லுகிறேன். எனக்கு அரேஞ்சிடு மேரேஜில் நம்பிக்கை இல்லை .”என்பதாக சொல்லியிருக்கிறார்.