“எண்ணமத்த ராசா ,பன்னி வேட்டைக்கு போனாராம்”னு மதுரை பக்கம் ஒரு சொலவடை உண்டு. அம்மாச்சிகளும் ,அப்பத்தாக்களும் அடிக்கடி சொல்லுவார்கள்.!
அது மாதிரி ஒரு பன்னிக்குட்டி வேட்டைக்கு இரண்டு ராசாக்கள் போகிற கதை.
டைரக்டர் அனுசரண் முருகையனுக்கு ரொம்பவே தில்.
ஒரு சீமைப்பன்னிக்குட்டி மேல கருணாகரன் பைக் மோதி அவருக்கு காயம்.
“பன்னி மேலயே இடிச்சிட்டே ,அது ரொம்ப கெட்டதாச்சே ..மறுபடியும் அந்த குட்டி மேல மோதிடு.பிரச்னை சால்வ் ஆயிடும்னு” குகைக்குள்ளே வாழ்கிற லியோனி சாமியாரு குறி சொல்றார்.அந்த பன்னியை தேடி கருணாகரன் அண்ட் தங்கதுரை அலைகிறது.
சீமைப்பன்னிக்குட்டியை சீதனமாக வாங்கிய யோகி பாபு அந்த குட்டியை தொலைச்சிட்டு தேடுறார்.குட்டி இல்லேன்னா கல்யாணம் நின்னுடுமாம்.
ஆக இந்த ரெண்டு கோஷ்டியும் பன்னிக்குட்டியை தேடப்போய் அதனால என்னென்ன சம்பவங்கள் நடக்கின்றன என்பதுதான் கதை.
வெயிட்டான கதையில நடிக்கிறமாதிரி கருணாகரன் யோகிபாபு ரெண்டு பேருமே உடல் வருத்தி நடிச்சிருக்காங்க. விஜய் டி வியல வர்ற மாதிரியே ராமர் தங்கதுரை வாழ்ந்துட்டு போறாங்க. லியோனுக்கு முதல்வர் ஸ்டாலின் நல்ல பதவியை கொடுத்திருக்கிறார். அதுக்கு ஒரு மரியாதை வேணாமா ?
தயாரிப்பு செலவு அதிகம்.அதுக்கேத்த மாதிரி வரவு வருமாங்கிறது டவுட்டுங்க.!