
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:
“இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது பி.வி.ஆர். வெளியிகிறார்கள். நான் வெளியிடுவதைவிட இப்படம் இப்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இப்படத்திற்கு நல்லது என்று தான் நினைக்கிறேன்.
இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். டிரைலரைப் பார்க்கும் போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். இயக்குனர் மணிபாரதிக்கு சிறப்பான வாழ்த்துகள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
இயக்குனர் பன்னீர் செல்வம் பேசும்போது,
“இயக்குனர் மணிபாரதி எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும் மனிதர். பட வாய்ப்பு இல்லையென்றாலும், பாடல் எழுதுவது, கதை எழுதுவது என்று சதா இயங்கிக் கொண்டே இருப்பார் “என்றார்.
நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி பேசும்போது,
“பேட்டரி எனக்கு முதல் தமிழ் படம். முழுவதும் சார்ஜில் இருக்கிறது. மேட் இன் சைனா இல்லை. மேட் இன் சென்னை பேட்டரி “என்றார்.
வசனகர்த்தா ரவி வர்மன் பச்சையப்பன் பேசும்போது,
“எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறோம். இப்படம் 2020 மார்ச் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா காரணமாக இவ்வளவு நாட்கள் தள்ளிப் போய் விட்டது. இப்படத்தில் வரும் சில காட்சிகள் ஒரு படத்தில் வந்திருக்கிறது. ஆனால், அது யதார்த்தமாக நடந்தது தான் ” என்றார்.
நடிகர் மதன்பாப் பேசும்போது,
“அனைத்து பெரிய இயக்குனர்களின் கதை டிஸ்கஷனிலும் இயக்குனர் மணிபாரதி இருப்பார். திரைப்படத்தைப் பொருத்தவரையில் சிறிய படம், பெரிய படம் என்று எதுவும் கிடையாது. பாகுபலி பிரமாண்டமாக ஓடியது போல, காக்கா முட்டையும் அமைதியாக வெற்றிபெற்றது. அதேபோல் இப்படமும் வெற்றி பெறும்” என்றார் .
இயக்குனர் மணிபாரதி பேசியதாவது:
“திரைச்சுவை என்னும் பத்திரிகையில் சப் எடிட்டராக பணியாற்றினேன். ரஜினி முதல் அனைவரையும் பேட்டி எடுத்திருக்கிறேன். ஜெயம் ராஜாவின் ரசிகன் நான். சிரஞ்சீவியை வைத்து படம் இயக்கி வருகிறார். தெலுங்கில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் இப்படமும் இருக்கிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். விழாவிற்கு வந்ததற்கு நன்றி.
இப்படத்தின் கதையை அம்மு அபிராமியின் அப்பாவிடம் கூறும்போது, அம்மு அபிராமி படத்தின் முழுக் கதையையும் கேட்டார். அம்மு அபிராமி அப்பாவிடம் நேரில் அழைத்து வாருங்கள் என்று கூறினேன். அவருடைய பாத்திரத்தைப் பற்றி 10 நிமிடங்கள் கூறினேன். அதன்பிறகு படத்தின் கதையைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை. அவருடைய நடிப்பை இயக்குநர் சரண் நடிகை சரிதாவுடன் ஒப்பிட்டார். நான் நடிகை ரேவதியுடன் ஒப்பிடுகிறேன். தயாரிப்பாளர் மாதையனுக்கு மிக்க நன்றி. , மாதையன் சார் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை செய்துக் கொடுத்தார். படம் முடிக்கும் வரை எந்த விதத்தலும் தலையிடவில்லை.
நான் செய்த புண்ணியமோ அல்லது என் அப்பா அம்மா செய்து புண்ணியமோ தெரியவில்லை. இயக்குனர் வெற்றி மாறன், நடிகர் சூரி மற்றிம் பலரும் இங்கு வந்திருக்கிறார்கள்.
நடிகர் செங்குட்டுவன் முதல் படத்திலேயே கூட்டத்தை சேர்த்து விட்டார். நடிப்புடன் தயாரிப்பு பணிகளையும் பார்த்துக் கொண்டார். இப்படத்திற்காக எதை செய்யலாம் என்று யோசனை கேட்டால், எது சிறந்ததோ அதைத்தான் தேர்வு செய்வார். அதுவே எனக்கு இப்படம் சிறப்பாக இயக்குவதற்கு உறுதுணையாக இருந்தது.
பிருந்தா சாரதி லிங்குசாமியின் ரன் படத்தைத் தவிர அனைத்து படங்களுக்கும் அவர் தான் வசனகர்த்தா. சாகித்ய அகாடமி விருது வாங்கும் தகுதி வாய்ந்தவர். வசந்தபாலனும் நானும் ஒரே இடத்தில் தான் தங்கியிருந்தோம். எம்.எஸ்.பாஸ்கர் வியந்து பார்க்கக் கூடிய நடிகர் அதில் எந்த சந்தேகமுமில்லை.
நடிகர் சூரி சாருக்கு இரவு 11 மணிக்கு பேசினேன். வளர்ந்து வரும் பெரிய நடிகர் எனக்காக இங்கு வருவதற்கு பெரிய மனசு வேண்டும். நான், எஸ்.ஜே.சூர்யா, மாரிமுத்து நாங்கள் மூவரும் ஆசை படத்தில் பணியாற்றினோம்..
இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்த மக்கள் தொடர்பாளர் ஜான்சனுக்கு நன்றி.”என்று பேசினார் .
விழாவின் இறுதியில், இப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இசைத்தட்டை வெளியிட்டார்கள்.
இந்த விழாவில் இயக்குனர்கள் வெற்றிமாறன், ஜெயம் ராஜா, சரண், வசந்தபாலன், பன்னீர்செல்வம், பிருந்தாசாரதி, நடிகர்கள் சூரி, மதன்பாபு, செங்குட்டுவன், மாரிமுத்து, நாகேந்திர பிரசாத் நடிகை அம்மு அபிராமி, கவிஞர்கள் நெல்லை ஜெயந்தா, சினேகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.












