கடந்த மே மாதம் டெல்லியில் 2.ஓ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்.உடன் அவரது மகள் ஐஸ்வரா தனுஷும் சென்றார். ரஜினி, ஓய்வுக்காக அவர் அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டது.
ஆனால் ஊடகங்களில் கடந்த இரு மாதங்களாக பல்வேறு வதந்திகள் செய்திகளாக வெளியாகி வந்தது..ஆனால் இதுகுறித்து ரஜினி குடும்பத்தினர் ரஜினி நலமுடன் ஓய்வெடுத்து வருகிறார் என்று மட்டும் கூறினர். இந்த நிலையில் நேற்று மாலை ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் வர்ஜீனியாவின் யோகாவில்லே நகரில் உள்ள லோடஸ் ஆசிரமத்துக்கு சென்றார்.
அவரை ஆசிரம நிர்வாகிகள் வரவேற்றனர்.அவர் சச்சிதானந்தா சுவாமிகளின்.உருவசிலைக்கு மலர் தூவி வணங்கினார். பின்பு அங்கு அமைந்துள்ள தன குருநாதரின் சமாதிக்கு சென்று சிறிது நேரம் தியானம் செய்தார். இப்புகைப்படங்களை ஐஸ்வர்யா தனுஷ் தன டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.இதன் மூலம் ரஜினி பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ரஜினிகாந்த் இம்மாத இறுதியில் சென்னை திரும்பவுள்ளதாக தெரிகிறது.