நடிகர் சங்கத்தில் தலைவர்,மற்றும் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற நாசர் , விஷால் ஆகியோர் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளரான தங்கையாவை நடிகர் சங்கத்திலிருந்து திடீரென நீக்கியுள்ளனர்.இதனால் தங்கையா சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நாசர், விஷால் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார், இதை தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி விசாரித்தார்.பின் விஷாலும், நாசரும் இதுக்குறித்து இரண்டே வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.