நடிகை திரிஷாவின் மேனேஜராக இருந்தவருக்கு திடீரென படத்தயாரிப்பாளராக ஆகவேண்டும் என ஆசை வந்தது. நியாயம் தானே! யாரையோ கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு பதில் நம்ம திரிசாவையே நடிக்க வைக்கலாமே, அவரும் இப்ப ஒன்னு ரெண்டு படம் தானே நடிக்கிறார்.தவிர பேய் மாதிரி நடிக்க நயன்தாரா ,கீர்திசுரேஷ் போன்ற நடிகைகள் தேவையில்லையே என்று நினைத்தாரோ,என்னவோ,நல்ல? பேய்க்கதையுடன் வந்த இயக்குனர் ஒருவரை வைத்து, த்ரிஷாவை ஹீரோயினாக்கி நாயகி’ என்கிற படத்தை ஆரம்பித்தார்.. பட பூஜைக்கு அமர்க்களமாக வந்து கலந்துகொண்டார் திரிஷா, தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக இது உருவாகியதால், தெலுங்கில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா, மற்ற புரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் த்ரிஷா கலந்துகொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது . இதற்கு என்ன காரணம் என்பது அவர்கள் இருவருக்கும் மட்டுமே புரிந்த( சம்பள) ரகசியம் என்கிறது கோலிவுட் பட்சி! மேனேஜரான தனக்கே இந்தா நிலைமையா என குமுறிய தயாரிப்பாளர், ஒருவழியாக கடந்த வெள்ளியன்று தெலுங்கில் மட்டும் படத்தை ரிலீஸ் செய்தாராம்.ஆனால் போட்ட காசாவது வருமா என்கிற லெவலில் படம் படுத்துவிட்டதால், தமிழில் ரிலீஸ் செய்வது எப்படி என நொந்துபோய் இருக்கிறாராம் தயாரிப்பளார்.. படத்தின் நாயகியான திரிஷா, படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு படத்தை கொஞ்சம் விளம்பரப்படுத்தி இருந்தால், ஓரளவாவது அங்கு படம் தப்பித்திருக்கும் என்கிறார்கள்.. இந்நிலையில் தமிழில் வெளியிடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் தவியாய் தவிக்கிறாராம் தயாரிப்பாளர்!