பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அமீர்கானின், கனவு படைப்பு ‘லால் சிங் சத்தா’.
இந்த திரைப்படத்தை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழில் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு பொருத்தமான மற்றும் முக்கியமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் அமீர்கானின் ‘ லால் சிங் சத்தா’வும் இணைந்திருக்கிறது.
அமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தில், அமீர்கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘ஃபாரஸ்ட் கெம்ப்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.