அக்கா,தங்கைன்னா இப்படி இருக்கணும்யா என்று சொல்கிற அளவுக்கு பாசப்பறவைகளாக இருக்கிறார்கள்.
ஜான்வி கபூரும் குஷி கபூரும்.!
அம்மா ஸ்ரீ தேவி இல்லைங்கிற குறையே இல்லாமல் வளர்ந்து வருகிறார்கள்.அப்பா போனி கபூரும் பிசினஸில் பிசி. தமிழ் ,இந்தி என வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
குஷியும் நடிக்க வந்து விட்டார். ஜோயா அக்தரின் ஆர்ச்சீஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
“குஷியின் படத்தைப் பார்த்தேன். அவ கடுமையாக உழைச்சிருக்கிறா. அவ நடிப்பை பார்த்து நான் ரொம்பவும் சந்தோசமா இருக்கேன். அவளை பத்தி யாராவது தப்பா சொன்னா ,யாரா இருந்தாலும் பார்க்க மாட்டேன்.நசுக்கிடுவேன்.”என்கிறார் ஜான்வி கபூர்.
பார்த்து பேசுங்கப்பா ,பாப்பா கொளுத்திடப் போவுது.!
.