அச்யுத்குமார் எழுத்தாளர். தண்ணி போட்டுக்கிட்டே கதை எழுதுவார். இந்தாளு எழுதுறதெல்லாம் அப்படியே நடக்குது. அதுதான் படத்தின் டைட்டில் தேஜாவு. பிரெஞ்சு வார்த்தை.இதுக்கு விஞ்ஞான ரீதியா விளக்கமெல்லாம் இருக்கு.அதை ஏன் நாம்ப மண்டைக்குள்ள ஏத்தணும்.?
இந்த படத்தை டைரக்ட் பண்ணிருப்பவர் அரவிந்த் சீனிவாசன். சினிமா ரிப்போர்ட்டரா இருந்தவர். இந்தப் படம்தான் முதல் படம். பின்னிருக்காப்ல.சக பத்திரிகையாளர் என்பதால் முட்டுக்கொடுத்திருக்கோம்னு நினைக்க வேணாம். திறமைசாலிக்கு எதுக்குங்க அதெல்லாம்.!
அருள்நிதி ,மதுபாலா ,ஸ்மிருதி ,மைம் கோபி இவங்கல்லாம் பெரிய ஆர்ட்டிஸ்ட். செல்ப் கான்பிடென்ஸ் ,தைரியத்துடன் தம்பி அரவிந்த் கதை எழுதி டைரக்ட் பண்ணிருக்கார்.சூப்பரா வருவான்கிற நம்பிக்கை இருக்கு.
சரி கதைக்குள்ள கொஞ்சம் டிராவல் ஆவோம்.
டிஜிபி மதுபாலா ,இவங்களோட பொண்ணு கடத்தப்படுறா.ஸ்டேட் லெவல் போலீஸ் அதிகாரியின் மக கடத்தப்படுறது,அப்புறம் என்னென்ன நடக்குது இதெல்லாம் அப்படியே அந்த கதாசிரியர் அச்யுத் குமார் கதையில வருது. இந்தாளு மேல சந்தேகம் வருது. ஸ்பெஷல் ஆபிசர் அருள்நிதிக்கும் அந்த டவுட்தான்.!
ஓங்குதாங்கான அருள்நிதிக்கு கம்பீரமான குரல். பிரண்ட் லைன் நடிகர்களில் இவரும் ஒருவர்.இந்த கதைக்கு பெருசா மம்பட்டி பிடிச்சி வெட்டனும்கிற அவசியம் இல்ல. த்ரில்லர் ஜானர்..சஸ்பென்ஸ் படம் .மக்களை கவரும் விதமாக பெர்பாமன்ஸ் இருந்தபோதும். அருள்நிதி பிரமாதமாக செய்றார்.எழுத்தாளர் அச்யுத்குமார எட்டி ஒரு உதை விடுவார் பாருங்க .சாவுற அடி .அதையும் தங்கிட்டு அந்த குடிகார எழுத்தாளர் சொல்ற பதில் தில்லுதான்!
அதிகார பலம் ,மக கடத்தப்பட்டதால் வருகிற பலவீனம்.ரெண்டையும் மதுபாலா ஈஸியா கடந்துறார் .சரியான தேர்வு.
இந்த படத்துக்கு டூயட்டெல்லாம் தேவைப்படாது. டைரக்டர் திணிக்கல .
பெரிய அஸெட் ஜிப்ரானின் பின்னணியும் ,பிஜி முத்தையாவின் கேமராவும் .!செம.!
படம் பார்க்கவறவங்களை தேஜாவு ஏமாத்தல .வித்தியாசமா இருக்கு.பெரிய ஆறுதல் கதைக்களம்.