மாநாடு படத்தில சிலம்பரசன் முஸ்லீம் கேரக்டரில் நடிச்சிருந்தார். மஹாவிலும் முஸ்லிம் கேரக்டர்.மாநாடு ராசி இந்த படத்துக்கும் ஒட்டிக்கும் என்று சிலர் ‘விஞ்ஞான ‘ரீதியாக புத்திசாலித்தனமாக காரணங்கள் சொன்னார்கள்.
அந்த ‘விஞ்ஞான ‘ரீதியான காரணம் சரியா இருக்கா படத்தில.?
இந்த அற்புதமான படத்தை வி.மதியழகன் ,டத்தோ அப்துல் மாலிக் இணைந்து மஹா படத்தை கொடுத்திருக்கிறார்கள். யு.ஆர் ஜமீல் இயக்கியிருக்கிறார்.
ரசிகர்கள் நம்பியது சிலம்பரசனை மட்டும்தான்.! ஹன்சிகா மோத்வானியை நம்பவில்லை.இந்த படம் ஹன்சிகாவுக்கு 50 வது படமாம். மற்றபடி ஸ்ரீகாந்த் ,தம்பி ராமையா ,கருணாகரன் .மானஸ்வி இன்னும் சிலர் முகம் காட்டியிருக்கிறார்கள்.
சிலம்பரசன் சும்மா கெஸ்ட் ரோல் !
வணிக ரீதியான எதிர்பார்ப்புக்கு சிலம்பரசன்.வணிக ரீதியாக பெரிய எதிர்பார்ப்பு ஹன்சிகாவுக்கு இருப்பதற்கு நியாயமில்லை. ஏனென்றால் பலவீனமான கதை.
சிம்பு இசுலாமியர் ,பைலட் , ஹன்சிகா கிறித்துவர் ஏர் ஹோஸ்டஸ் .இருவரும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள் .ஒரே மகள் மானஸ்வி .
ஒரே பகுதியில் வாழ்கிற தம்பி ராமையாவின் பேத்தி ,சிம்புவின் மகள் மானஸ்வி இன்னும் சில சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள்.
கொலைகளை கண்டுபிடிக்கிற போலீஸ் அதிகாரி ஸ்ரீ காந்த். பார்த்து பல வருஷம் ஆச்சு .இவரது தொடர்பான துப்பு துலக்குகிற காட்சிகளில் துடிப்பில்லை .
சிலம்பரசனின் காட்சிகள் கதையுடன் ஒட்டவில்லை. சேசிங் ,பைட்டிங் என கடத்துகிறார்கள்
ஆறுதலாக இருப்பது “கெடுத்திட்டியே என்னை கெடுத்திட்டியே “என்கிற பாடல். லவ்லி.!
மற்றபடி கேமிராவை ரத்தத்தில் முக்கி எடுத்திருக்கிறார்கள் .பல காட்சிகளில் குருதி வழிகிறது .ஹன்சிகா சுமார்தான்.!ஒரே மாதிரியான முகபாவம் பல காட்சிகளில் !
இப்படி ஒரு ஏமாற்றத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.!