கல்யாணம் பண்ணிட்டு புருஷனோடு சந்தோஷமா குடும்பம் நடத்திட்டிருக்கிற நடிகை அவ.! நீ எந்த வகையில் சிறப்பா இருப்பேன்னு நெனச்சு உன்கிட்ட வருவான்னு நினைக்கிற. ?
நீயே பொழப்புத்தலப்பு இல்லாம அஞ்சுக்கும் பத்துக்கும் அலையுற. அவ கோடியில் மெதக்கிறா .புருசனும் கோடீஸ்வரன் .எந்த வகையில அவங்களை விட நீ கெத்துன்னு சொல்வே ?கனவிலே கூட நீ பஞ்ச பரதேசி…!
மன் விந்தர் சிங். 25 வயசு. ஒன்ஸ் அப் ஆன் எ நடிகர். இப்ப மும்பை ஜெயிலில் .!
நடிகை கத்ரினா கைப்பின் ரசிகன். நடிகையைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று படங்களையும் வீடியோவையும் தனக்குத் தோதா எடிட் பண்ணி ரசிக்கிற டேஸ்ட் .
“என்னை கல்யாணம் பண்ணிக்கோ. இல்லேன்னா உன் புருஷன் விக்கி கவுசலை காலி பண்ணிட்டு உன்னையும் கொலை பண்ணிடுவேன்” என்று சமூக வலை தளங்களில் மிரட்டல் விட்டுக்கொண்டிருந்தான்.
விக்கி கவுசல் புகார் பண்ணவே ஐ பி சி 506 -II ,354 -Dஆகிய பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்து ஆளை உள்ளே வைத்திருக்கிறது.