திருச்சிற்றம்பலம் ..அப்பனே ஈசா .!திருச்சிற்றம்பலம்,!
சிவனடியார்களின் நாவில் நர்த்தனமிடும் அவரது திருநாமமே திருச்சிற்றம்பலம்.
நம்ம தனுஷுக்கு பிடித்த பெயர். நமசிவாய .!
தனுஷ் நடித்து வெளியாகவிருக்கிற படம்தான் திருச்சிற்றம்பலம். அவருக்கு 44 வது படம்.
இந்த படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ,பிரகாஷ் ராஜ் ,மற்றும் ராசி கன்னா ,பிரியா பவானி சங்கர் , ஆகியோர் இருந்தாலும் அடிஷனல் அவதார் நித்யா மேனனும் நடிக்கிறார்.
அனிருத் இசை .
அண்மையில் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்கிற பெரிய ப்ளோரில் பாரதிராஜாவை சந்தித்தேன்.
புலியிடம் இருந்து அதாவது அதனுடைய பிடிக்குள் சிக்காமல் ஒரு சிறுமியை காப்பாற்றுவது போல ஒரு காட்சியை படமாக்கினார்கள்.படத்தின் பெயர் தெரியவில்லை.
வயது உயர்ந்துகொண்டே சென்றாலும் அந்த மனிதனிடம் இருந்த ஆர்வத்தை நேரில் பாக்க முடிந்தது.