கபாலி படத்திற்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்து அவை யாவும் தள்ளுபடியாகி விட்ட நிலையில், நாளை மறு நாள் 22ம் தேதி கபாலி திரைப்படம் வருவது உறுதி என அறிவிக்கப்பட்டு பல திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கியுள்ள நிலையில்,.தற்போது லிங்கா படத்தின் நஷ்டத்தை இன்னும் தரவில்லை என கோவையைச் சேர்ந்த சுக்ரா பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் மகேந்திரபிரபு , கபாலி படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார், இதையடுத்து,. சென்னை உயர்நீதி மன்றம் ,இம்மனு குறித்து நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என ரஜினி,மற்றும் படத் தயாரிப்பாளர் தானு, ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்ட ஏழு பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.