நல்ல ,தரமான படங்களுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதை தயாரிப்பாளர்கள் நம்பாமல் கவர்ச்சி படங்களையும் ,சாதிய மோதல் படங்களையும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நம்பிக்கையில் இருந்து சற்று மாறுபட்டு ஒரு படம் வெளியாக இருக்கிறது என்பதாக ஒரு படத்தை கோலிவுட்டில் சொல்லுகிறார்கள். படத்தின் பெயர் ‘லோக்கல் சரக்கு.’
’ஒரு குப்பைக் கதை’, ‘நாயே பேயே’ ஆகிய படங்களை அடுத்து டான்ஸ் மாஸ்டர் தினேஷ் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.
யோகி பாபுவும் ஒரு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
உபாசனா நாயகி, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பலரும் இருக்கிறார்கள்.
வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு எம்.மூவேந்தர் மற்றும் கே.எஸ்.பழநி ஒளிப்பதிவு செய்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.பி.ராஜ்குமார். குடிப்பழக்கத்தின் தீமைகளை சொல்லுவதாக இயக்குநர் சொல்லுகிறார்.