“எண்ணித் துணிக ” ஐயன் வள்ளுவனின் குறள் நினைவுக்கு வராமல் இருந்தால் நீங்கள் தாய் மொழி வழியாக கல்வி கற்காதவர் என்பதை உணர்த்துகிறீர்கள் என்பது பொருள் .
சரி ,எண்ணித்துணிக படத்தின் கதை என்ன?
அயல்நாட்டு கொள்ளைக்காரன் தேடுகிற அளவுக்கு இன்ன விலை என நிர்ணயம் செய்ய முடியாத அளவுக்கு காஸ்ட்லியான டைமண்ட்ஸை பற்றிய கதைதான்.!
இந்த டைமண்ட்ஸ்களை மந்திரி ஒருவர் பதுக்கி வைத்திருக்கிறார் ,அவரிடமிருந்து அவைகளை கொள்ளை அடிப்பதற்காக நடக்கும் சண்டைகளும் துரோகங்களும் மரணங்களும்தான் கதை. வழக்கமாக உறுமுகிற மந்திரிகளின் முகத்தை விட ,இந்த கதையில் வருகிற மந்திரி பெட்டர். நடிகர் வைபவின் அண்ணனாம் .சரியான உருளைக்கட்டை. தெனாவட்டு ,திமிர் ,எள்ளல் எல்லாமே ரசிக்க முடிகிறது. மந்திரி என்றால் சின்ன வீடு இல்லாமலா ?
வைரங்களுக்காக மந்திரிக்கு சொந்தமான நகைக்கடைக்குள் நுழைகிற கொள்ளைக் கூட்டம் நடத்திய துப்பாக்கி சூட்டில் நாயகன் ஜெய்யின் நிச்சயிக்கப்பட்ட மனைவியும் கொல்லப் படுகிறார்.விடுவாரா ஜெய் ? போலீசும் வேணாம் ஒரு புண்ணாக்கும் வேணாம் என்று தனியாக நின்று துணிந்து கண்டுபிடிக்கிறார் என்பதை இயக்குநர் வெற்றிச்செல்வன் புதிய டெக்னிக் துணையுடன் சொல்லியிருக்கிறார். கைக்கடியாரம் வழியாக செய்தியை பரிமாறிக்கொள்வது புதுசுதான்? கொள்ளை அடிக்கிற நகைகளை பங்கீடு செய்வதில் இருக்கிற தாராளத்திலும் ஒரு டுவிஸ்ட்டை நுழைத்து விரோதம் -துரோகம் -மரணம் என கதையை கொண்டு பி-போயிருப்பது பாராட்டுக்குரியது. இது மட்டுமே போதுமா?
ஜெய் வழக்கமான நடிப்பு.
கதையின் தொடக்கத்தில் லாஸேஞ்சல்ஸை காட்டி பில்டப் பண்ண பார்த்தது படு வேஸ்ட். சென்னைக்கு கேமரா திரும்பிய பிறகுதான் சற்று விறுவிறுப்பு. நகைக்கடை சண்டை பரபரப்பாக இருக்கிறது. ஆனால் லவ் எபிசோட்டையும் பாடலையும் ரசிக்க முடியவில்லை. வயிற்றுக்குள் எதோ உருள்வதைப்போல ஒரு சோதனை.இங்கே விழும்ஆடியன்ஸ் இடைவேளைக்குப் பின்னர்தான் எழுவான். நல்ல வேகமெடுக்கிறது கதை.!.
அதுல்யா ரவி லவ் பண்ணவும் பாடி ஆடவும் மட்டுமே வருகிறார்.
அஞ்சலி நாயரை அழ வைத்திருக்கிறார்கள்.
வசனங்கள் எடுபடவில்லை .இதைப்போல பாடலும் மனதில் ஒட்டவில்லை..இயக்குநர் பெயர் வெற்றிச்செல்வன்.!